Monday, November 22, 2010

Guest Post - 38 : Today's Guest - Jaleela


Today, we have Jaleela from "Samayal Attakasankal" is with us. She lives in Dubai. She is interested in cooking and tailoring. Her blog was started in February 2009 and soon it will complete two years in the blog world. As of now, she has about 485 posts in her blog, which includes not only recipes but also posts related to bringing up kids, women health, etc. She started to cook when she was just 13 years old. She learnt lot of delicious dishes from her Mom, MIL and Grandma. Her recipes were published in famous Tamil magazines and many popular websites. She is a very famous Tamil Blogger and hence, the interview with her is in Tamil. She has shared a special sweet "Mittakana", which is served during Islamic weddings. I'l try to post the English version of her recipe soon. Let us hear from her now...

நித்துஸ் கிச்சன்: வணக்கம். உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்.
ஜலீலா: நான் ஜலீலா, "சமையல் அட்டகாசங்கள்" என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளேன். நான் பிறந்தது சென்னை ஆனால் வளர்ந்தது திண்டிவனத்தில். சென்னையில் திருமணம் முடிந்து, துபாய் வந்து 18 வருடங்கள் முடிந்துவிட்டது. எனக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். பத்து வருடங்களாய் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். சிறுவயது முதலே சமையலில் ஆர்வம் உண்டு.

நித்துஸ் கிச்சன்: சமையல் தவிர்த்து தங்களுக்கு வேறு எதில் எல்லாம் ஆர்வம் உண்டு.
ஜலீலா: எனக்கு தையலில் ஆர்வம் உண்டு. நான் இப்பொழுது பார்த்து வரும் வேலையில் சேர்வதற்கு முன்பு சிலருக்கு தையல் மற்றும் ஹிந்தி வகுப்பு எடுத்து வந்தேன். தற்சமயம், வேலை பளு காரணமாக, என்னால் தொடர்ந்து வகுப்புகள் எடுக்க முடியவில்லை.

நித்துஸ் கிச்சன் : உங்கள் வலைப்பூ பற்றி சொல்லுங்களேன்.
ஜலீலா: என் வலைப்பூவில் இதுவரை 485 பதிவுகள் இருக்கின்றன. நான் சமையல் குறிப்பு மற்றும் இன்றி, அவ்வப்பொழுது குழந்தை வளர்ப்பு குறிப்புகள், மருத்துவ குறிப்புகள், சமையலறை குறிப்புகள், தையல் மற்றும் என் சொந்த அனுபவங்கள் பற்றியும் எழுதி வருகின்றேன்.

நித்துஸ் கிச்சன் : நீங்கள் எந்த வயதில் சமைக்க ஆரம்பித்தீர்கள்? முதன்முதலாக என்ன சமையல் செய்தீர்கள் என்று நினைவு இருக்கின்றதா?
ஜலீலா: நான் ஏழாவது படிக்கும் போது, அம்மாவிற்கு சென்னை செல்ல வேண்டிய நிர்பந்தம். அந்த சமயத்தில், எனக்கு தெரிந்த விதத்தில், அப்பா மற்றும் தங்கைகளுக்காக புளிக்குழம்பும், முட்டையும் செய்தேன். சாப்பிட்டுவிட்டு அவர்கள் பாராட்டியது, எனக்கு சமையல் மேல் ஆர்வத்தை தூண்டியது.

நித்துஸ் கிச்சன் : உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாமே மிகவும் அருமையாகவும், நாவை சுண்டி இழுக்கும் வகையிலும் இருக்கின்றது. எல்லாமே நீங்களாகவே செய்வதா? இல்லை ஏதாவது சமையல் புத்தகம் பார்த்தோ இல்லை ஏதேனும் வகுப்புக்கு சென்றோ கற்று கொண்டீர்களா?
ஜலீலா: மகிழ்ச்சி :-) புத்தகத்தில் படித்தோ, சமையல் வகுப்பிற்கு சென்றோ கற்று கொண்டதில்லை. என் அம்மாவும், மாமியாரும்தான் எனக்கு இந்த அளவிற்கு நன்றாக சமைக்க சொல்லி கொடுத்தவர்கள்.சுவையான சமையலை அம்மாவிடமும், டயட் சமையலை மாமியாரிடமும் கற்று கொண்டேன். என் பாட்டியின் குறிப்புகள் எனக்கு பெரும் அளவில் உதவியாக உள்ளன. துபாய் வந்த பின்பு, நானாகவே, ஏராளமான இந்திய, அரபி, பிலிப்பைனி உணவு வகைகளும், பார்பிகியு சமையலும் கற்று கொண்டேன்.பல சமயங்களில், எனக்கு தோன்றியபடி, மசாலாகள் சேர்த்து புது வகை சமையலை என் பிள்ளைகளுக்காக சமைப்பதும் உண்டு.

நித்துஸ் கிச்சன்: உங்கள் சமையல் குறிப்புகள் ஏதாவது பிரபல இதழிலில் அல்லது இணையதளத்தில் வெளி வந்துள்ளதா?
ஜலீலா: பிரபல இணையதளங்களான அறுசுவை, தமிழ்குடும்பம் மற்றும் சமையலறையில் என்னுடைய ஏராளமான சமையல் குறிப்புகள் வந்துள்ளன. தென்றலில் 2005-ஆம் வருடம் என் சமையல் குறிப்பு வெளி வந்தது அதன் பின்பு இந்த வருடத்து விகடன் தீபாவளி மலரில் என் சமையல் குறிப்பு ஒன்று வந்துள்ளது.

நித்துஸ் கிச்சன்: சில நாட்கள் முன்பு, நீங்கள் உங்கள் குறிப்புகள் திருடபட்டு இருப்பதாக ஒரு பதிவு போட்டு இருந்தீர்கள்.உங்கள் குறிப்புகள் திருடப்பட்டது இதுதான் முதல் முறையா? இந்த மாதிரி திருட்டை தவிர்க்க தாங்கள் மேற் கொண்டுள்ள நடவடிக்கை என்ன?
ஜலீலா: இது முதல் முறை அன்று. பிரபல தினசரியில் கூட, என் பெயர் இல்லாமல் என் சமையல் குறிப்புகளை எடுத்து போட்டு உள்ளார்கள். புதிதாய் வலைதளம் ஆரம்பித்த சிலர், என் குறிப்புகளை அப்படியே எடுத்து போட்டுள்ளனர். அந்த மாதிரி செய்பவர்களின் பதிவுகளில், பின்னூட்டத்தில் சென்று கடுமையாய் எச்சரிப்பேன். என் பதிவுகள் மூலம் வலை உலகத்து நண்பர்களுக்கு தெரியபடுத்தி, அவர்களையும் அந்த பதிவுகளின் கீழ் எச்சரிக்கை செய்யும்படி வேண்டுவேன்.

நித்துஸ் கிச்சன்: சரி, இன்று எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள போகும் சமையல் குறிப்பு என்ன?
ஜலீலா: இஸ்லாமிய திருமணங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இனிப்பு "மிட்டாகானா".

தேவையான பொருட்கள் :

1. பாசுமதி அரிசி – 1/4 கிண்ணம்
2. கேசரி பொடி மஞ்சள் (அ) சிவப்பு
3. உப்பு – 1/2 சிட்டிகை
4. இனிப்பில்லாத கோவா – 1 மேசைக்கரண்டி
5. சர்க்கரை – 1/2 கிண்ணம்
6. நெய் – 2 மேசைக்கரண்டி

தாளிக்க :

1. பட்டை – சிறிய துண்டு
2. முந்திரி , திராட்சை – தலா ஆறு




செய்முறை :

1. முதலில் அரிசியை களைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதி வரும் போது, களைந்து ஊற வைத்த அரிசியை போட்டு, கேசரி பொடியை சேர்க்கவும். வெந்தவுடன், உதிரியாக வடிக்கவும்.
3. நெய்யை உருக்கி, மிதமான சூட்டில் முந்திரி மற்றும் காய்ந்த திராட்சையை பொன்னிறமாய் வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
4. அடுத்து, பட்டை தாளித்து, வடித்த சாதம் மற்றும் சர்க்கரை சேர்த்து, சாதம் உடையாமல் நிதானமாய் கிளறவும்.
5. சர்க்கரை உருகி வரும் சமயம், கோவாவை சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின்பு, முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறி, இறக்கவும்.

குறிப்பு :

1. கோவா கிடைக்கவில்லை என்றால், இரண்டு மேசைக்கரண்டி நீடோ பால் பவுடரை அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு சுண்ட வைத்து, கோவா பதத்தில் எடுத்து அதை உபயோகபடுத்தலாம்.
2. மேலே கொடுத்துள்ள அளவு, மூன்று பேருக்கு போதுமானது.

நித்துஸ் கிச்சன்: தங்களிடம் பேசியதில் இருந்து, உங்களை பற்றியும், உங்கள் வலைப்பூ பற்றியும் நன்கு அறிந்து கொண்டோம். அருமையான, சுவையான இனிப்பை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ஜலீலா : நன்றி நித்து.

Friends, If you are interested to be featured as Nithu's Kitchen's Guest, please drop a mail to nithuskitchen[at]gmail[dot]com.

10 comments:

எல் கே said...

wonderful interview and receipe

Priya Suresh said...

Glad to know more about Jaleela..a wonderful blogger..

Asiya Omar said...

ஆகா ஜலீலா! உங்கள் கலந்துரையாடல் அருமை.மிட்டாகானாவும் சூப்பர்.

Gayathri Kumar said...

Nice interview. Happy to know about Jaleela..

Menaga Sathia said...

ஜலிலாக்காவை அறுசுவை இணையதளித்திலிருந்து தெரியும்..உரையாடலும்,ரெசியும் சூப்பர்!!

GEETHA ACHAL said...

Good interview....

Vikis Kitchen said...

Wonderful interview dear! Always like Jaleela akka's way of writing very much. Mittakhana looks superb!

Priya Sreeram said...

happy to know about jaleela and the fact she blogs completely on Tamil is so heartwarming! great i'view nithu!

ஜெய்லானி said...

ஆஹா...நித்து கிச்சன்ல ஜலீலாக்காவா..கலக்கல் ..!! :-))

முதல் முறையா ஒரு தமிழ் இண்டர்வியூ ..அசத்தல்..!! :-)))

Unknown said...

Cannot understand a bit of the interview but the sweet looks very inviting. Would love to get the recipe in English.