Monday, July 25, 2011

Guest Post : 55 - Today's Guest : Menaga


Today, we have Menaga from Sashiga. Menaga lives in France and holds a Masters degree in Mathematics. She is such a talented person. She is interested in painting, embroidery, tailoring and cooking. She is a Tamil Food Blogger and hence the interview with her is in Tamil. Now, let us hear from her..

நித்துஸ் கிச்சன்: உங்களை பற்றி நம் நண்பர்களுக்கு சொல்லுங்களேன் மேனகா.

மேனகா: நான் கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். எனக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி. எனக்கு பெயிண்டிங், எம்ப்ராய்டரி,ப்ளவுஸ் தைப்பது, புதுவிதமான சமையல் செய்வது ரொம்ப பிடிக்கும்.


நித்துஸ் கிச்சன்: இவ்வளவு திறமையான ஒரு பெண்ணை வலைதள நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் செய்த பெயிண்டிங் அல்லது எம்ப்ராய்டரி வேலையின் புகைப்படத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே.

மேனகா: எம்ப்ராய்டரி,பெயிண்டிங் ஒர்க் எல்லாம் இந்தியாவில் அம்மா வீட்டில் வைத்திருக்கேன். அதனால் அவற்றின் புகைப்படங்கள் கைவசம் இல்லை. இப்பொழுதுதான் கொஞ்ச நாட்களாய்,என் கீழ்வீட்டு ப்ரெஞ்சுக்கார பாட்டியிடம் ஸ்வெட்டர் பின்ன கற்றுக் கொண்டிருக்கிறேன். என் மகள் ஷிவானிக்காக பின்னிய உல்லன் குல்லாயின் புகைபடத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க சந்தோஷம்.




நித்துஸ் கிச்சன்: உல்லன் குல்லாய் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது மேனகா. உங்களுக்கு வலைப்பூ தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது எப்படி ?

மேனகா: நன்றி. என் வலைப்பூ சஷிகா-வை நான் தொடங்கியது தற்செயல் என்றே சொல்ல வேண்டும். என் தோழி ஒருவர், வலைப்பூ தொடங்குவது பற்றி கேட்க, எனக்கும் ஆர்வம் ஏற்பட்டு, நானும் சஷிகாவை ஆரம்பித்துவிட்டேன்.


நித்துஸ் கிச்சன்: உங்களுடைய முதல் சமையல் அனுபவத்தை பற்றியும், உங்கள் சமையலின் முதல் ரசிகர் பற்றியும் சொல்லுங்களேன்.

மேனகா: நான் எட்டாவது படிக்கும் போது, முதன்முதலாக ரசம் செய்ய கற்று கொண்டேன். அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் அனைத்து பொருட்களையும் என் ரசத்தில் பார்க்கலாம்! என் அப்பாதான் என்னுடைய சமையலுக்கு முதல் ரசிகர். நான் செய்யும் ரசத்தை, ரசித்து ருசித்து உண்டுவிட்டு, அருமை,அற்புதம்னு என்று சொல்லி ஊக்கப்படுத்துவார். அவரிடம் இருந்து பெற்ற பாராட்டே எனக்கு சமையலில் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது.


நித்துஸ் கிச்சன் : உங்கள் சுட்டி மகள் ஷிவானி பற்றி சொல்லுங்களேன்.

மேனகா: அவள் இந்த செப்டெம்பரில் தான் பள்ளிக்கு செல்ல போகிறாள். அவளுக்கு இப்பொழுதே உணவு வகைகளின் சுவை எல்லாம் நன்றாக தெரிகிறது. நான் சமைத்த உணவு நன்றாக இல்லையெனில் அவள் சாப்பிடவே மாட்டாள். அதனாலேயே நான் சமைக்கும் போது சற்று கவனம் எடுத்தே செய்கிறேன்!


நித்துஸ் கிச்சன்: உங்கள் வலைப்பூ பற்றிய செய்திகளை முன்னணி பத்திரிகைகளில் பார்த்த நினைவு இருக்கிறது. அது பற்றி சொல்லுங்கள்.

மேனகா: என் வலைப்பூ பற்றி ஆனந்தவிகடன் வரவேற்பறையிலும்,தேவதை,லேடீஸ் ஸ்பெஷல் (ஆசிரியர் கிரிஜாம்மா மற்றும் தேனக்காவிற்கு நன்றி) இதழ்களில் வந்துள்ளது.




நித்துஸ் கிச்சன்: இன்று எங்களுடன் நீங்கள் பகிர்ந்துக் கொள்ள போகும் பலகாரம் என்ன?

மேனகா: இன்று நான் கல்கண்டு வடை/ Sugar Candy(Kalkandu) செய்முறையை பகிர்ந்துக் கொள்கிறேன்.

தேவையான பொருட்கள் :

முழு வெள்ளை உளுந்து - 1 கப், கல்கண்டு - 3/4 கப், எண்ணெய் - பொரிக்க




செய்முறை :

உளுந்தை 3/4 மணிநேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, தண்ணீர் விடாமல் நன்றாக மைய அரைக்கவும். அரைக்கும் பொழுதே, கல்கண்டு சேர்க்கவும். மாவு தயார் செய்தவுடன், ஒரு வாணலில் எண்ணெய் வைத்து, காய்ந்தவுடன் வடைகளை தட்டி போட்டு, எடுக்கவும். சூடாக பரிமாறவும்.

குறிப்பு: வடையை எண்ணெயில் தட்டி போட்ட, சிறிது நேரத்திலேயே திருப்பிவிடவும் இல்லையெனில் கருகிவிடும்.

நித்துஸ் கிச்சன் : நன்றி மேனகா. உங்களை பற்றியும், உங்கள் வலைப்பூ பற்றியும் எங்களுடன் நீங்கள் பகிர்ந்துக் கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

மேனகா: நன்றி நித்து.

You may be interested in :


17 comments:

BeenaShylesh said...

hoo i couldnt read wats written...

Laxmipriya said...

Nice to know about Menaka, that too in tamil..

Prathima Rao said...

Though i cannot understand whats written in this post, i can atleast see that Sashiga is a very talented woman!!!! Keep rocking!!
Prathima Rao
Prats Corner

Vimitha Durai said...

Great to know more abt Menaga.. Nice write up

GEETHA ACHAL said...

மேனகாவின் பேட்டி ரொம்ப நல்லா இருந்தது....நன்றி நிது....

Prema said...

Nice to know about menaga and thanks to nithu...

Priya Sreeram said...

great knowing about menaga- one talented lady and nithu kudos to you for sharing this with us !

Torviewtoronto said...

checked out your guest

KrithisKitchen said...

Good to know more about Menaga... Great job Nithu..

Unknown said...

I wish I could read it. The recipe does look great and thanks for restarting this Nithu :)

Saraswathi Ganeshan said...

Lovely vadai, Nice to know about Menaga..

Menaga Sathia said...

Thx u nithu for sharing this post!!

Jaleela Kamal said...

கல்கண்டு வடை பிரமாதம்
வாழ்த்துகக்ள் மேனகா

Nithu said...

That's a crispy and yummy vada.

ஜெய்லானி said...

சூப்பர் வடை ...இல்லை இல்லை கல்கண்டு வடை :-)

நித்து கிச்சனில் ஷிவானி கிச்சன் அசத்தல் :-)

web hosting india said...

It's good recipe. I enjoyed to eat above the recipe. Preparation steps is very good.

website hosting india

web hosting india said...

It's great stuff. I enjoyed to read this articles.